இன்று தான் அவர் நம்மை விட்டு பிரிந்த நாள் . 21st ஜூலை 2001.
ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது . ஒரு முறை அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன் ..பல விசயங்களை அலசிவிட்டு நடிப்புக்கு வந்தோம் .அவருக்கு அப்பொழுது உடல் நலம் சற்று குறைவு . இருந்தாலும் நடித்துக்கொண்டு இருந்தார் . நான் அவரிடம் ‘ எப்பொழுது ரிடயர் ஆவிர்கள் என்று கேட்டேன் ….ஏன் ? நான் நடிக்கறது உனக்கு புடிக்கலையா இல்ல உன் TVநடிப்பு க்கு நான் போட்டியா ? என்றார் ….சிருத்துக்கொண்டே ..
இல்ல அப்பா உங்க உடம்புக்கு ஏன் ஸ்ட்ரைன் தரீங்க என்டறேன் ….பதில் வரவில்லை ..மீண்டும் கேட்டேன் …சற்று யோசித்து சொன்னார் …என்னக்கி கணேசன் செட்டுக்கு லேட்ஆ வரானோ அன்னக்கி ரிடயர் ஆகிவிடுவாண்டா என்றார் …அந்த அபார மனிதனின் தொழில் பக்தியை பற்றி யோசித்தேன் . காலத்தை மற்றவர் நேரத்தை அவர் மதித்ததை பற்றி யோசித்தேன் …எனக்கு பேச்சு வரவில்லை ….சற்று நேரம் அவர் என்னை பார்த்தார் , யோசித்து விட்டு திரும்பினார் ..இரண்டு அடி எடுத்து ,திரும்பி என்னை பார்த்து சொன்னார் ….இல்லடா மோகன் அன்னக்கி கணேசன் செத்துடுவாண்டா …. செத்துடுவான் …..
ஒரு வேலை இன்று ஏழு ஆண்டுகளுக்கு முன் அவர் செட்டுக்கு லேட்ஆ போனாரோ ……. இல்லை, இல்லை ரொம்ப சீக்ரமாகவே போய்விட்டார் …..
நடிப்புக்கு மற்றும் அல்ல ..தொழில் பக்திக்கும் இலக்கணம் வகுத்தவரை இன்றும் என்றும் மறவாதிருக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
Be First to Comment