இதை தமிழிலும் போட வேண்டும் என்ற காரணத்தினால் ….நூறு ஆண்டுகளுக்கு முன் என் தாத்தா ( A.V.Raman) அவரின் சொந்த ஊரை விட்டு வந்தார் . ஏதோ காரணங்களால் அப்பக்கமே திரும்பவில்லை . என் தந்தை (V.P.Raman) கூட அந்த கிராமம் எங்கு இருக்கிறதோ என்று ஒரு சில முறை தேடிவிட்டு முயற்சியை கை விட்டுவிட்டார். தாத்தாவின் கூட பிறந்தவர்கள் (Muthukrishnan,Pattabhi ,Swami ) ரங்கூன் சென்று வ்யாபாரம் தொடங்கினர் . இவரோ இங்கிலாந்து சென்று தனது இன்ஜினியரிங் கல்வியை தொடர்ந்தார் . உறவுகள் இருந்தனவா ? அந்த ஊரில் ? இரண்டாம் உலக போர் முடிந்ததும் அவரின் சகோதரர்களில் ஒருவர் பர்மாவிலிருந்து அகதியாக வந்தார்( A.Swami ). அவர்கள் சந்தித்தது சென்ட்ரல் ஸ்டேஷனில் …அகதிகளுக்கு உதவ சென்ற என் தாத்தா …திடீர் என்று தன் சகோதரரை போல் ஒருவரை பார்த்து ….நீ சாமி தானே என்று கேட்க ….. சந்தோஷம் .இருந்தாலும் மயிலாடுதுறை (மாயவரம்) அருகில் உள்ள அவர்களின் சொந்த கிராமத்துக்கு யாரும் செல்ல வில்லை. கிராமத்தின் பெயர் அறிவளுர். ரயில் விபத்து நடந்த அறியளுருடன் குழப்ப வேண்டாம் . ஒரு முறை படப்பிடிப்பில் சொந்த ஊரை பற்றி பேச்சு வரவும் நான் எங்கள் ஊரை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினேன். எங்கள் புகைப்படக்காரர் உடனே கூறினார் …..அது எலந்தங்குடி பின்னால இருக்கு என்று ….கேட்டவுடன் மெய் சிலுர்ததது….சுமார் 1895 க்கு பிறகு இப்பொழுதுதான் சொந்த ஊரை எங்கள் குடும்பம் மீண்டும் தெரிந்து கொண்டது என்று. அடுத்த மாதமே சென்று அம்மண்ணை வணங்கினேன் . எங்கள் குல தெய்வம் அங்குள்ள ஒரு சாஸ்தா – அய்யனார் என்று என் பாட்டி குரியது எனக்கு நினைவில் வந்து அந்த கோவிலையும் தேடி கண்டுபிடித்தேன் . மனம் நேகுழ்ந்தது. இதெல்லாம் நடந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதே ஊர் அதே குலதெய்வம் என்றுள்ள சில நல்லவர்கள் ஒன்று சேர்ந்து இப்பொழுது அந்த கோவிலுக்கு திருப்பணி செய்ய முன் வந்துள்ளனர் ….ஆகவே தான் இதை நினைவு கொர்ந்தேன். காணமல் போன எங்கள் குடும்பம் மீண்டும் குலதேய்வத்தை வந்தடைந்தது அந்த தெய்வத்தின் அருள் என்று தான் சொல்ல வேண்டும் . அய்யனார் என்ற கடவுளை பற்றி தெரிந்தவர்கள் அவரின் சரித்திரம் , ஸ்தலங்கள் போன்றவை பற்றி ஏதாவது குறிப்புகள் இருந்தால் எனக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.
அய்யனார் – அறிவளுர்
Published inUncategorised
Be First to Comment