Skip to content

Date archive for: July 2008

சிவாஜி கணேசன் – AVM

எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பெருமை நமது அய்யாவிற்கு உண்டு . பராசக்தி என்ற அந்த காவியத்தில் முதல் முதலில் திரையில் தோன்றி சரித்திரம் படைத்தார் . முதல் படமே சூப்பர் ஹிட் . முதல் படத்திலேயே கதாநாயகன் . 1950 ல் சுமார் ஜூலை ஆகஸ்டில் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து படப்பிடிப்பு தொடங்கி 1952 தீபாவளிக்கு தான் படம் வெளி வந்தது . இரண்டு ஆண்டு போராட்டம் , பல இன்னல்கள்,பூசல்களை தாண்டி வந்து தமிழ் திரையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது அந்த படம் . ஏன் ….அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகை ஆகாது . அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பட்ட சோதனைகளை பற்றி அவரே அவரது சுய சரிதத்தில் எழுதி இருக்கிறார் .
பராசக்தி வெளி வந்த 50 வது ஆண்டு அந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான AVM நிறுவனம் ஒரு அற்புதமான சாதனையய் செய்தது. Continue reading சிவாஜி கணேசன் – AVM

நடிகர் திலகம் …..ஒரு அஞ்சலி …

இன்று தான் அவர் நம்மை விட்டு பிரிந்த நாள் . 21st ஜூலை 2001.
ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது . ஒரு முறை அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன் ..பல விசயங்களை அலசிவிட்டு நடிப்புக்கு வந்தோம் .அவருக்கு அப்பொழுது உடல் நலம் சற்று குறைவு . இருந்தாலும் நடித்துக்கொண்டு இருந்தார் . நான் அவரிடம் ‘ எப்பொழுது ரிடயர் ஆவிர்கள் என்று கேட்டேன் ….ஏன் ? நான் நடிக்கறது உனக்கு புடிக்கலையா இல்ல உன் TVநடிப்பு க்கு நான் போட்டியா ? என்றார் ….சிருத்துக்கொண்டே ..

Continue reading நடிகர் திலகம் …..ஒரு அஞ்சலி …

S.P.B another simple soul

Having said a bit about the Superstar, let me talk of another really great person, a man who does not know the meaning of the words “pride” and “selfishness”.The Great singer SPB. Balu Anna and I have had several interactions , thanks to a few films we shot and thanks to , you will be surprised Indian Cricketeers Anil Kumble, Venkatesh Prasad, Rahul Dravid, VVS Lakshman and so on.It was because of these people that I had a chance to re establish and re affirm my friendship with my colleague and fantastic actor Subalekha Sudhakar and his lovely “dharmapatni” S.P.Shailaja – an equally talented person. Continue reading S.P.B another simple soul

Kuchelan The Film

I find that there have been several discussions and views and points and counterpoints being made about the film….Good, if not great…but , let us be clear on what this film is…..a film on Friendship , a film on how a person can stay simple even when he has reached giddy heights , a film of a person who does not forget his past and a film of a simple village barber who does not feel like using old friends to relieve his difficulties, especially economic ones. Continue reading Kuchelan The Film

சூப்பர் ஸ்டார் – இரண்டாம் சம்பவம்

இந்த முறை நான் கூறும் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் பத்து, பனிரெண்டு ஆண்டுகள் என்றே சொல்லலாம். நான் ஒரு சிவாஜி ரசிகன் என்றும், எம்.ஜி.ஆர் அவர்களின் குடும்ப வக்கீலும், நண்பரின் மகன் என்பதும் தெரியும் என்று நினைக்கிறேன். 1975க்கு பிறகு நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதைக் குறைத்து ஆங்கிலப்படங்களையே விரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் பல நல்ல படங்களை, ரிலீஸ் ஆன காலத்தில் பார்க்கவில்லை. திரை உலகிற்கு வந்த பிறகு இவைகளை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன். என் குருநாதர் கே.பி. யின் படங்கள் உட்பட! இந்த லிஸ்டில் நான் ஒரு நாள் இரவு வீட்டில் அனைவரும் உறங்கியபிறகு ராகவேந்திரர் படம் பார்த்தேன். Continue reading சூப்பர் ஸ்டார் – இரண்டாம் சம்பவம்

Superstar …….!!!

நான் இதுவரை தமிழில் எழுதியது இல்லை. முதல் பதிவே ஒரு நல்லவரை பற்றி இருக்கவேண்டும் , அதுவும் நம்மோடு இருப்பவராய் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்னொரு காரணமும் உண்டு. நடிகர் திலகத்தை பற்றி எழுதலாம் என்றால் அதை ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதிவிட்டேன். இப்பொழுது பேசப்படும் படம்…வர இருக்கும் படம் குசேலன்.! அதில் ஒரு சிறிய வேடம் எனக்குக்கிடைத்தது. என் நண்பர் இயக்குநர் பி.வாசு மூலமாக. இப்படத்துக்காக நான் சுமார் இரண்டு வாரங்கள் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக சென்று இருந்தேன். அப்பொழுது தான் அந்த அதிசய நபருடன் பேசி பழக நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. என்னவென்று சொல்ல? இப்படி ஒரு நபரை நான் சந்தித்ததே இல்லை! இனியும் சந்திப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது. அவரின் எளிமையை காண பல சந்தர்ப்பங்கள் , படப்பிடிப்புக்கு இயக்குநர், 11 மணிக்கு வந்தால் போதும் என்று சொன்னாலும், 9 மணிக்கே வந்து எங்கள் அனைவருடனும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்ததைச்சொல்லவா? Continue reading Superstar …….!!!

All Rights Reserved