பெனாங் நகரில் பெரியார் படப்பிடிப்பு – அம்பேத்கராக நான் .
இயக்குனர் வசனம் படிக்க நாங்கள் கேட்க …..
எனது நண்பர் நடிகர் சத்யராஜ் அவர்களை நான் சுழர்ட்சங்கம் சார்பில் வானவில் என்ற எங்களது மாநில மாநாடுக்கு பேட்டி கண்டேன் . இது ஒரு அற்புதமான கேள்வி பதில் நிகழ்ச்சியாக அமைந்தது . அவருக்கும் எனக்கும் ஒரு வேற்றுமைஇருந்தாலும் எங்கள்ளுக்குள் ஒரு நல்ல நட்பும் உண்டு. அதுதான் ஆன்மிகம் . தலைவா நம்ம அதை பற்றி மட்டும் பேச வேண்டாம் , நானும் மாற மாட்டேன் நீங்களும் மாற மாடீங்க என்று சொல்லுவார். அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று …..ஓபன் ஆக பேசுவார் . சற்று உணர்ச்சிவசப்படுவார் என்றாலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் . ஒரு சில நேரங்களில் அவரது கொள்கை அவரை சில கருத்துக்களை சொல்ல வைத்து விடுகிறது …..அதுவே அவருக்கு பலவீனம் என்று சிலர் சொல்லல்லாம் ….அதை ஒரு பலமாகவும் எடுத்துகொள்ளலாம் . அவரோடு பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஒரு அற்புதமான யதார்த்தத்தை அவர் நடிப்பில் நாம் பார்க்கலாம். என்றுமே அவர் பந்தா பண்ணதில்லை . எல்லோருடனும் சகஜமாக பழகுவார் . ஒரு முறை காஞ்சீவரம் கோவில் அருகே ஷூட்டிங் நடந்தது . எங்களுடன் ஸ்ரீவித்யா வும் இருந்தார் . அப்பொழுது ஒரு பஸ் நிறைய ஆந்திர மாநிலத்தில் இருந்து பயணிகள் வந்தார்கள் . நாங்கள் இருந்த இடத்தை நோக்கி வந்தார்கள் . அவர்கள் இருவரும் ஹீரோ ஹெரோஇன் ஆக நடித்தவர்கள் , அவர்களின் கைஎழுத்தை வாங்க வருகிறார்கள் என்று நான் சும்மா இருந்தேன் . பார்த்தால் என்னிடம் வந்து படம் எடுத்துக்க வேண்டும் என்று சொல்லிஎடுத்துக்கொண்டார்கள்,அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளவே இல்லை .
எனக்கு ஒரு விதமான சங்கோஜம் . சத்யராஜ் சிறுத்து கொண்டே தலைவா டிவி பவர் அது என்றார். அப்பொழுது மர்மதேசம் விடாது கருப்பு என்ற தொடர் தெலுங்கு மற்றும் தமிழில் ஓஹோ என்று ஓடிக்கொண்டு இருந்தது அவருக்கும் தெரியும் . பார்த்துவிட்டு என்னையும் பல முறை பாராட்டி இருக்கிறார் . இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதரை சந்திப்பது அரிது . ஆண்டவன் அவருக்கு அனைத்து சுகம்களையும் நிரந்தரமாக தர நான் வேண்டிக்கொள்கிறேன் .
அந்த ரோட்டரி நிகழ்ச்சியை யூடுபில் போட்டுஇருக்கிரேன் ……அதில் அவர் மக்கள் திலகம், நடிகர் திலகம் , பாலச்சந்தர் , பாரதிராஜா என்று எல்லோரை பற்றி பேசினார் .
அது மட்டும் இல்லை ……மிமிக்ரி யும் செய்து அசத்தி இருக்கிறார் ……….
Be First to Comment